ஸ்ரீ வாலைகுருசாமி கோவில்

சுமார் 800 வருடங்களுக்கு முன் காசியிலிருந்து புறப்பட்டு பல ஸ்தலங்களுக்குப போய் விட்டு கொம்மடிக்கோட்டை வந்து இங்குள்ள மரச்சோலைகளையே ஆசிரமமாக் கொண்டு ஸ்ரீவாலைகுருசாமி குருவாகவும் ஸ்ரீ காசயானந்த சுவாமி சிஷ்யராகவும் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது இன்னும் பல பல யோகிகளும் வந்து சேர்ந்து தவம் செய்திக்கிறார்கள்.சுவாமிகள் இருபேரும் யோக முதிர்ச்சி மற்றும் சித்துகள் பெற்று அங்கே நிர்விகர்பம் ஆகிவிட்டார்கள். அவர்கள் இருவரும் வழிபடும் தெய்வம் ஸ்ரீவாலாம்பிகையே அவர்கள் தவம் செய்த இடமே இந்த பாலக்ஷேத்ரம் ஞானியார்மடம் ஸ்ரீவாலை குருசுவாமி கோவில்.

ஸ்ரீ வாலைகுருசுவாமியும் அவர் தம் சீடர் ஸ்ரீகாசியானந்தரும் ஸ்ரீவாலாம்பிகையை வழிபட்டு சித்தி பெற்று இங்கேயே ஜீவ சமாதி கொண்டுள்ளார்கள். ஸ்ரீ வாலைகுருவும் ஸ்ரீ காசியானந்தரும் ஒரே கருவறையில் இருந்து அருள் பாலிக்கிறார்கள். தான் உபாசித்த தாயை மக்களும் உபாசித்து சுகம் உலக பெற வேண்டி வாலையம்பிகைக்கும் தனி சன்னதி கண்டு மக்கள் அனைவரையுமே தன் தாயை வணங்க வைத்து இருக்கிறார்கள்.

இது மாகான்களின் தியான பூமி. உணர்வு பூர்வமாக வழிபடவும், மகான்களின் ஆசி உண்டு. அனைத்தும் செயல்வடிவம் பெறும்.


 வாலையை வணங்குவோம்…     வளமெல்லாம் பெறுவோம்…